Show all

பொருளாதாரத்தின் அடிப்படையில் மிக வேகமாக வளரும் நாடு இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி

சர்வதேச அளவில், பொருளாதாரத்தின் அடிப்படையில் மிக வேகமாக வளரும் நாடு இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், பிரதமர் மோடி , பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே, முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் கலந்துகொண்ட மாநாட்டில் பங்கேற்றனர்.

 

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, இந்தியா, திறன்மிகு தொழிலாளர்கள் நிறைந்த நாடு. முன்னணி நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. இதன்காரணமாக, சர்வதேச அளவில், பொருளாதாரத்தின் அடிப்படையில் மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளதாக மோடி கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.