Show all

அள்ளி அணைத்து மகிழும் தாத்தாவும் பாட்டியும்! மழலைகள் குறும்பில்.

நிலா நிலா எங்கே போனாய்?
மணியாங் குளத்துக்கு மண்ணெடுக்கப் போனேன்
மண்ணெதுக்கு? செப்புப் பண்ண
செப்பெதுக்கு? பணம் போட
பண்மெதுக்கு? மாடு வாங்க
மாடெதுக்கு? சாணி போட
சாணியெதுக்கு? வீடு மெழுக
வீடெதுக்கு? பிள்ளை பிறக்க
பிள்ளையெதுக்கு?
பெரப்பம் பாயிலே பெரண்டு விளையாட
ஈச்சம் பாயிலே இருந்து விளையாட
தாழம் பாயிலே தவழ்ந்து விளையாட
ஓலைப் பாயிலே ஓடி விளையாட
கோரைப் பாயிலே குதித்து விளையாட
எண்ணெய்க் குடத்திலே துள்ளி விளையாட. 
இரண்டாம் வகுப்பு படிக்கும் போது நான் கற்றுக் கொண்ட பாடல் இது. குழந்தைகளின் குறும்புத் தனத்தை பார்க்கும் போதெல்லாம் இந்தப் பாடல் நினைவுக்கு வரும். 

பேரக்குழந்தைகளை, என் மகள்- மருமகள் சமாளிக்க முடியாமல் கோபப் படும் போது, நானும் என் மனைவியும் இந்தப் பாடலை அவர்களுக்கு சொல்லி ஆற்றுப்படுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் அங்கீகாரத்தில், பேரக்குழந்தைகளின் குறும்பு கூடுதல் ஆகும் போது, அவர்களை அள்ளி அணைத்து கொண்டாடுவதில் அத்தனை சுகம்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,299.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.