Show all

தமிழால் மீண்டாள்! ஆண்டாள்

ஆரியர்குல கையகத்தே அகப்பட்ட ஆண்டாள்

அன்றாடம் தீண்டாமை அவலத்தைத் தாண்டி

சேரியலே பிறந்தமகள் சிறுமைமகள் என்றே

சேர்ந்தஇனக் கொடுமைகளை செரிமானம் செய்யாள்

பேரிகையின் முழக்கமென பேரிரைச்சல் எழுப்பி

பேராற்றல் மிக்கவளாய் பேதைஅந்த பருவத்தில்

காரிகைதாம் சேர்ந்துவிட்டாள் கார்வண்ணன் தன்னடி

கனித்தமிழ் ஆற்றலோடு காவியம் படைத்திடவே

 

 

தமிழ்தந்த எழுச்சியிலே தருக்கர்களின் வாயடைக்க

தந்தனளே திருப்பாவை தானேநாச்சியாராய் கோவையும்

அமிழ்தான தமிழ்தாமே ஆற்றலூட்டு மொழியன்றோ

அதனாலே ஆண்டாள்தாம் ஆரியரைச் சுழன்றடித்தாள்

நிமிர்ந்து விட்டஆண்டாள் நெருப்பான நெஞ்சமொடு

நீறுக்குள் கனன்றிருக்கும் நெருப்பெனவே காய்ந்தாள்

அமிழ்ந்து விட்டார் அன்றைக்கு ஆரியர்கள் எல்லாம்

அவளுக்கே கோயில்கட்டியோர் அவனியிலே நின்றார்.

 

 

சூழ்ச்சியலே பிறந்து சூழ்ச்சியலேவளர்ந்த சூழ்ச்சிகுல ஆரியர்

சூடிக்கொடுத்த நாச்சியார் சுடர்கொடியாளை சூதாக

தாழ்ச்சிசொலும் பான்மையிலே தரங்கெடுப்போர் நின்றார்

தமிழ்மன்னர் அவருக்கு தகுதிதந்த தாளே

வீழ்ச்சியுறா மனநிலையில் வெற்றிமகள் ஆண்டாள்

வெறுப்புணர்ச்சி வீணர்களை வீழ்த்தி நிமிர்ந்திட்டாள்

ஆழ்வாருள் ஒருத்தியாய் ஆண்டாள் கோயில் கொண்டாள்

அன்றைக்கு ஆரியர் அரவமற்றுப் போனார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.