Show all

நீங்கள் தமிழன் தானா?

நீங்கள் தமிழன் தானா? 
அடையாளங்காட்ட ஓர் அரும்பெரும் சோதனை.
தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ்நிலம், தமிழ்வரலாறு, தமிழ்இயல்-
இவை தமிழின் ஐம்பரிமாணங்கள்.
இவற்றுள் எது பற்றியேனும் யாராவது பேசும்போது-
இவற்றுள் எது பற்றியேனும் யாராவது பாராட்டும் போது-
இவற்றுள் எது பற்றியேனும் யாராவது கொண்டாடும் போது-
உங்களுக்கு கோபம் வருகிறதா?
உங்களுக்கு கொஞ்சமாக கோபம் வருகிறதா?
இது முட்டாள்தனம் என்று கோபம் வருகிறதா? 
இவன் யார் இதை சொல்வதற்கு என்று கோபம் வருகிறதா?
உங்களுக்குள் ஏதாவது எதிர்க்கட்டுமானம் தோன்றி கோபம் வருகிறதா?
உறுதியாக நீங்கள் தமிழன் இல்லவேயில்லை.
ஒரு விழுக்காடும் நீங்கள் தமிழன் இல்லவேயில்லை.
உங்களை நீங்கள் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதையேயில்லை.
மாறாக-
உங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறதா?
இப்படியெல்லாம் செய்தி இருக்கிறதா என்று மகிழ்ச்சியில் துள்ளுகிறதா? 
செல்லுகிறவர் முகம் குறித்து யாதொன்றும் உங்களுக்குத் தோன்றவில்லையா?
எந்த திறனாய்வுக்கும் இடந்தராமல் உங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறதா?
நீங்கள் தமிழன் தான்- நீங்கள்தான் தமிழன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.