Show all

பூமியைக்காப்போம்! நரேஷ் கட்டுரைகள் வரிசையில்.

ஆசு என்றால் குற்றம், இரியர் என்றால் இல்லாதவர் என்ற பெருமைக்குரிய தலைப்பில் அமைந்த சான்றாண்மைக்குரிய ஆசிரியப் பெருந்தகையீர்! மாண்புகளை ஆக்கி கொள்கிறவர் மாணக்கர் என்கிற பெருமைக்குரிய மாணவத் தோழர்களே! நான் உங்கள் முன்னிலையில் பூமியைக் காப்போம் என்ற தலைப்பில் ஓர் உறுதி மொழியைக் கட்டமைக்க மேடையேறியுள்ளேன் வணக்கம்.

1.சூரியன் அதைச் சுற்றிவரும் முதன்மையான ஏழுகோள்கள் புதன், வெள்ளி, நாம்வாழும் பூமி, செவ்வாய், வியாழன், சனி என்பன.
2.இந்த ஏழு கோள்களில் சூரியன், புதன், வெள்ளி மூன்றும் வெப்பம் மிகுதியான கோள்கள்.  செவ்வாய், வியாழன், சனி மூன்றும் குளிர் மிகுதியான கோள்கள். மையத்திலிருக்கிற கோள் என்பதாலேயே வெப்பத்திற்கும், குளிருக்கும் மையமாக இருக்கிற காரணத்தாலேயே நாம் வாழும் புவி மனிதர்களும், விலங்குகளும், தாவரங்களும் வாழ்ந்திடத் தகுதியானதாக இருக்கிறது.
3.பூமியில், பூமத்திய கோட்டிற்கு வடக்கே செல்லச் செல்லக் குளிர். பூமத்திய கோட்டிற்கு தெற்கே செல்லச் செல்லக் குளிர். முழு தெற்கில் அண்டார்டிகா. முழு வடக்கில் ஆர்டிகா. இரண்டும் பூமியைக் கடலில் மூழ்காமல் காக்கும் பனிமண்டலங்கள்.
4.அண்டார்டிகாவிலும் சரி, ஆர்டிகாவிலும் சரி ஆறுமாதம் குளிர் ஆறு மாதம் மித வெயில். இங்கே வெயில் வரும் போது அங்கே குளிர் அங்கே வெயில் வரும் போது இங்கே குளிர். இப்படித்தான் இரண்டு மண்டலங்களும் பூமி கடலில் மூழ்காமல் காத்துக் கொண்டிருக்கிறது.
5.பூமியில் மலையும் இருக்கிறது. கடலும் இருக்கிறது. இதனாலேயே பருவக்காற்றுகள், மழை, ஆறு, நிலத்தடி நீர் இதுவெல்லாம் சாத்தியமாகி மனிதன், விலங்குகள், தாவரங்கள் அனைத்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
6.இயற்கை தன்னைத்தானே தகவமைத்து இப்படி காத்து வரும் நிலையில், நாம் மரங்களை வெட்டி, மலைகளை உடைத்து, மணலைத்திருடி, இயற்கையின் தகவமைப்புக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறோம்.
7.எல்லையில்லாமல் வாகனங்களைப் பெருக்கி, காற்றை மாசு படுத்தி பூமியைச் சுடேற்றி வருகிறோம். இதனால் பூமியின் வெப்பம் கூடி கடல்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
8.நாம் மரத்தை வெட்ட மாட்டோம்- மணலைத் திருட மாட்டோம்- மலைகளைக் குடைய மாட்டோம்- காற்றை மாசுபடுத்த மாட்டோம்- மாற்றுக் கோள்களிலிருந்து வெளிப்படும் வெப்பத்திலிருந்து பூமியை பாதுகாக்கும் வேலைகளை செய்கிற ஓசோனைக் கிழிக்கும் வகையாக எல்லையில்லாமல் ஏவுகணைகளை செலுத்துவதைத் தவிர்ப்போம் என்பதாக பூமியைக் காக்க ஆறறிவு பெற்ற மனிதர்களாகிய நாம் உறுதி எடுப்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.