Show all

உ.வே.சாமிநாத அய்யர்

தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகளாக பிறமொழி ஆதிக்கத்தில் தொய்வுற்றிருந்த தமிழ்மொழியை மீட்டெடுத்து தமிழர்களைப் பெருமையுறச் செய்த தமிழறிஞர்களில் இவரும் ஒருவர். சென்னை மாநிலக் கல்லூரி எதிரே இன்னும் சிலையாக, ஓங்கி நின்று கொண்டிருக்கிறார் உ.வே.சாமிநாத அய்யர். அவர் மட்டும் இல்லை என்றால் எத்தனையோ இலக்கியங்கள் தமிழுக்கு கிட்டாமலேயே போயிருக்கும். “ஏடு காத்த ஏந்தல்” என்று அவரைச் சிறப்பிக்கிறார்கள். பல்வேறு ஆசிரியர்களிடமும் திசிபுரம் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் பயின்ற உ.வே.சாமிநாத அய்யரின் தலையாய பணி சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பாபாடல், பெருங்கதை முதலிய பழைய இலக்கியங்களை ஏட்டுச்சுவடிகளில் இருந்து தொகுத்து, உரைகளைச் சரிபார்த்து தமிழ் உலகத்திற்குத் தருவதற்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தார். குறுந்தொகைக்கு உரை அகப்படாததால் அவரே உரையும் எழுதினார். நன்னூல் மயிலைநாதர் உரை, சங்கர நமச்சிவாயர் உரை என இலக்கண நூல்களையும் பதிப்பு செய்தார். அவர் சேகரித்து வைத்திருந்த நூல்கள் மட்டும் சுமார் 24 மாட்டு வண்டிகள் அளவுக்கு தேறிற்று.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.