ஆரியக் காப்பியத்தின் வில்லனான இராவணன் ஆரியனாகவேதான் இருந்திருக்க முடியும் என்ற நிலையில், இராவணன் தமிழன் என்று ஏமாறும் சிலரும், இராவணன் சிங்களவனே என சிங்கள ஆதிக்கவாதிகள் நிறுவ முற்படும், சூழலும் இருக்கத்தான் செய்கிறது.

“வடாஅது பனிபடு

நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு

குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு

தொடுகடல் குணக்கும்

குடாஅது தொன்றுமுதிர்

பௌவத்தின் குடக்கும் (புறநானூறு 6வது பாடல்)

புறநானூற்றுப் பாடல்- தமிழர் எல்லைகளாக இன்றைக்கு இருக்கிற முழு இந்தியாவைக் குறிப்பிடுகிறது.

தமிழர்கள் ஆசியா, ஐரோப்பா, ஆப்பரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் தரை வழியாகவும், கடல் வழியாகவும் வணிகம் செய்து வந்தனர். அந்தக் காலக்கட்டங்களில், தமிழர்கள் இந்தியாவை தங்கள் வணிகப் பகுதிகளில் நாவலந்தேயம் என்று அறிமுகப் படுத்தினர்.

உலகத்தின் முதன் வல்லரசாக விளங்கியது தமிழர் நாவலந்தேயம். உலகினர் நாவலந்தேயத்தை தங்கள் உச்சரிப்பில் ந்தேயா INDIA என்று அழைத்தனர்.

நாவலந்தேயம் (இந்தியா) முழுவதும் பரவி வாழ்ந்த தமிழர்-

தென்பகுதியில், உலகின் மிகச் சிறந்த நாகரீக மரபினராய் உலா வந்தனர். மொழி வளர்ப்பதற்காக சங்கம் நிறுவினர். வேளாண்மை வளர்ச்சிக்காக ஆறுகளைத் தடுத்து, அணை கட்டியும் சமவெளிப் பகுதிகளில் ஏரி குளங்களை அமைத்தும் நீர் வளம் காத்தனர்.

உள் நாட்டில் வணிகம் சிறக்க ‘விழாதிருக்க விழா’ என்று இயற்கை சார்ந்து, பருவத்திற்கு ஒரு விழா கொண்டாடினார்கள்

வெளிநாடுகளில் வணிகம் மேற்கொள்ள கப்பல் கட்டி கடலோடினார்கள்.

தங்கள் நாடுகளில் வணிக ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழர் நாவலந்தேயத்தைக் காண உலகம் முழுவதுமே ஆர்வம் கொண்டிருந்தன. அது போது, கிமு 1200 வாக்கில் நடு ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இமயமலைக் கணவாய் வழியாக இந்தியாவின் வடக்குப் பகுதியில் குடியேறி வேதகால நாகரீகத்தைத் தொடங்கினார்கள்.

ஆரியர்கள் வேதகாலத்தில், நாவலந்தேயத்தில்; தாங்கள் புழங்கிய பகுதியை பாரத் என்று அழைத்தார்கள்;. அவர்கள் பாரத் என்று அழைத்த பகுதியில் திருப்பதிக்கு தெற்கே இருக்கிற தென்புலத் தமிழர்கள் பகுதிகள் வராது.

ஐரோப்பியர் வரவுக்குப் பிறகே திருப்பதிக்குத் தெற்கே அமைந்த தென்புல தமிழர் பகுதியும் இந்தியாவிற்குள் உள்ளடக்கப் பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு தென்புல தமிழர் நாவலந்தேயமும் சேர்த்தே பாரதம் ஆனது. உலகினரும், தமிழரும் தவிர இந்தியாவில் பிற மாநிலத்தவர் நாவலந்தேயம் என்கிற இந்தியாவை பாரத் என்று அழைக்கிறார்கள்.

மொகஞ்சதாரோ, ஹரப்பா, அரிக்காமேடு, கீழடி நகர நாகரிகங்கள் அனைத்தும் நாவலந்;தேயத்தில் எந்த அயலவரும் நுழைவதற்கு முந்தைய தமிழர் நாகரீகங்களே.

ஆரியர் வரவுக்குப் பிறகு வடபுலத் தமிழர்கள் ஆரியர்களோடு போராடியும், வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டும் பெரும்பான்மை ஆரியச் சார்பிலும் சிறுபான்மை தமிழச் சார்பிலும் புத்தினங்களாக மலர்ந்தனர்.

அதுபோது, நாவலந்தேயம் என்றழைப்பதை தமிழர் நிறுத்தி விட்டனர். செந்தமிழ் புழங்கிய பகுதியை செந்தமிழ் நாடு என்றும், வடமொழிக் கலப்பால் உருவான திசை மொழி புழங்கிய பகுதிகளை கொடுந்தமிழ் நாடு என்றும் அழைத்தனர்.

அயலினச்சார்பில், புத்தின மலர்ச்சி காரணமாக- செந்தமிழ் நாட்டு எல்லை காலத்திற்கு காலம் குறுகிக் கொண்டே வந்தது. நாவலந்தேயத்தில் ஆரியர் குடியேறிய பாரத் பகுதியும், கொடுந்தமிழ் நாட்டுப் பகுதியும் விரிந்து கொண்டே சென்றன.

1757 ல் ஐரோப்பியர் தாங்கள் இந்தியா என்று அறிந்திருந்த நாவலந்தோயத்தை தேடி வந்த போது அவர்கள் உயர்வாக மதித்து வந்த நாவலந்தேயம் இல்லை. வடக்கே பாரதமும் தெற்கே தமிழ்நாடும் இருந்தன. அவர்களே இந்தியாவை ஒருங்கிணைத்தார்கள்.

முகமதியர்கள்- வடஇந்தியாவில் சமணம், பௌத்தம் தவிர்த்த வடஇந்திய மதக்கோட்பாடுகளுக்கு ஹிந்து எனப் பெயரிட்டர்கள். ஹிந்து மத மக்களால் அந்தக் கால கட்டத்தில் பேசப்பட்ட மொழியை ஹிந்தி என்று அழைத்தார்கள்.

ஹிந்து மதத்திற்கும் ஹிந்தி மொழிக்கும் பெயரிட்டவர்கள் முகமதியர்களே.

வேதகால மக்களால் பேசப் பட்ட மொழிகள் பாலி, பிரகிருதம், சம்ஸ்கிருத மொழிகளே.

தமிழ், பிராகிருதம், சமற்கிருதம், உருது, பாரசீகம், அராபியம் ஆகியவைகளின் கலவை மொழிதான் மகமதியரால் பெயர் சூட்டப்பட்ட கடிபோலி ஹிந்தி.

தமிழர் அல்லாத இந்திய மக்களின் மதம்: ஹிந்து.

விழாக்கள்: வேதங்கள், புராண, இதிகாசங்களில் குறிக்கப் பட்ட பண்டிகைகள்.

தமிழர்களுடைய இறையியல் கோட்பாடுகள், விழாக்கள் என்பன வேறு.

ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே இராமயணமும் மகாபாரதமும் இயற்றப் பட்டன.

இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்டது. மகாபாரதம் வியாசரால் எழுதப் பட்டது.

இந்த ஆயிரம் ஆண்டு காலமும், அவர்கள் குடியேறிய பகுதியில் வசித்த தமிழர்களை அழிக்கவும் அப்புறப் படுத்தவும் செய்தார்கள். நள்ளிரவில்- மாட்டை தொழுவத்தில் அடைத்து வைத்திருப்பதைப் போல நீரை அடைத்து வைத்திருக்கிறார்களே யென்று, தமிழர்களின் அணைக்கட்டுகளை தகர்த்து நீரை அதன் போக்கில் ஓடவிட்டார்கள். தமிழர்களைப் புரிந்து கொள்ளவோ, தமிழர் நாகரீகத்தை அறிந்து கொள்ளவோ முயலவேயில்லை. தமிழர்களை எதிரிகளாகவே பார்த்தார்கள்; அசுரர்களாக கற்பித்தார்கள். தமிழர்களை நேரடியாகவும், வஞ்சகமாகவும் தாக்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எல்லைகளை விரித்துக் கொண்டே போனார்கள். தாங்கள் விரித்துக் கொண்ட பகுதிக்கு பாரத் என்று பெயரிட்டார்கள்.

இப்படியாக ஆயிரம் ஆண்டுகால, தமிழர்களுக்கு எதிரான போர் மற்றும் வஞ்சகங்களால் அவர்களுக்கு கிடைத்த அனுபவ காப்பியங்கள் தாம் இராமாயணமும், மகாபாரதமும்.

ஆக, இராமயணம், மகாபாரதம் இரண்டும் உண்மையோ கற்பனையோ எதுவாக இருந்தாலும்-

கதைத் தலைவன், தலைவி, கதாபாத்திரங்கள் காலம் கிமு1200க்குப் பிந்தயதே.

அந்தக் காலக் கட்டத்தில் இலங்கை தமிழர்களின் பகுதியாகவே இருந்தது.

அந்த நிலையில் இராமயணத் தலைவன் இராமன், தமிழகத்தைக் கடந்து இலங்கைக்குச் சென்றிருந்தால் புறமுதுகிட்டுதான் ஓடி வந்திருக்க முடியும். எனவே இராமன் பயணப்பட்ட இலங்கை வேங்கட மலைக்கு வடக்கே தான் அமைந்திருக்க முடியும்.

ஆரியர்கள் நாவலந்தேயத்தில் (இந்தியா) பாரத் பகுதியை உருவாக்கி வந்த நேரத்தில்,

ஆரியர்கள் நாவலந்தேயத்தை அடைந்த 600 ஆண்டுகளுக்குப் பிறகு-

பாரசீகர்கள்-

தங்கள் நாட்டிற்கு தரைவழியாக வணிகம் மேற்கொண்டிருந்த தமிழர் நிலப்பகுதி நாவலந்தேயத்தை, இந்தியா என்று தேடி வந்த போது-

வணிகத்திற்காக தமிழர்களைச் சந்திப்பதற்கு பதிலாக ஆரியர்களைப் போரில் சந்திக்க வேண்டியதாயிருந்தது.

வடபுலத்தமிழர்களோடு ஆரியர்களுக்கு அடுத்ததாக பாரசீகர்கள் கலந்தனர்.

பாரசீகர்களுக்கு 300 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தான்.

முகமதியர்கள் (கிபி712-1526) படையெடுத்து வந்;து ஆரிய பாரதத்தை கலக்கு கலக்கு என்று கலக்கினார்கள்.

தென்புலத்தமிழர் பகுதியை-

கிபி1488 போர்த்துகிஸ்யரான வாஸ்கோடகமா முதன் முதலாக நாவலந்தேயத் தமிழரைத் தேடி தென்புலத்தமிழகம் வந்தடைந்தார்.

  • ஐரோப்பியர் அனைவரும் வந்தனர். வணிகம் செய்ய வந்தவர்கள் நாடு பிடித்தார்கள்.

அதே காலகட்டத்தில் தான் முகமதியர்களும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் மட்டும் நுழைந்திருந்தனர்.

ஆக அதுவரை தென்புலத் தமிழர் பகுதிகளுக்கு எந்த அயலவரும் படை நடத்தி வந்திடவே யில்லை.

மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது.

கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய் மொழியில் உள்ள ராமகியென், லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

இராமாயணம்; கம்பர் எனும் பெரும் தமிழ்ப்புலவரால் இயற்றப்பட்டதால் கம்பராமாயணம் என அழைக்கப் படுகிறது.

இந்நூல் இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்ட ஒரு வழி நூலாகும்.

இதுவொரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார் வடமொழி கலவாத தூய தமிழ்ச்சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.

(வடசொல் கிளவி வடஎழுத் தொரிஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே)

கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி, பொருள் , நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்கசுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப்பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.

ஆரியர்களுக்கு தென்புல தமிழர்கள் மீதான ஒட்டுதல் என்பது இராமயணம், மகாபாரத காப்பியங்களால் தான் ஏற்பட்டது. இராமன் வாழ்ந்ததாகக் கருதப்படுகிற காலத்தில் ஆரியர்களுக்கு தென் புலத் தமிழர்களோடு சண்டையும் இல்லை உறவும் இல்லை.

கம்பராமாயணத்தால் தான் இராமன் காலத்து இராவணன் இன்றைய இலங்கைப் பகுதியைச் சார்ந்தவனாக சித்தரிக்கப் பட்டது.

கம்பராமாயண (இராமயணம் அல்ல) காலத்தில் சோழர்கள் வலுவிழந்து இலங்கையை தமது ஆட்சியிலிருந்து விடுவித்து விட்டார்கள். சிங்களர் அரியணை ஏறினார்கள். அதனால் சோழர்களுக்கு பாரதம் நட்பு நாடாகவும், இராமன் தமிழனாகவும், இராவணன் சிங்களவனாகவும் ஆக்கப் படும் சூழல் ஏற்பட்டது.

தமிழகத்தில் குடியேறிய ஆரியர்களில் சிலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டியங்கினர். இராமனை தமிழனாக்கி, இராவணனை அரக்கன் ஆக்கினர்.

பார்ப்பன எதிர்ப்பு இயக்கமான திராவிட இயக்கத்தினர்- இராமயணம் வடமொழி ஆரியக் காப்பியம் ஆயிற்றே?

இராமன் எப்படித் தமிழனாக முடியும்?

இராவணன் தான் தமிழன் என்று, புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியத்தை எழுதக் காரணமானர்கள்.

சிங்களவர்களோ- தாங்கள் இலங்கையின் பழங்குடிகள் தாம் என்று நிறுவ தற்காலத்தில் சன்றுளைத் திரட்டி இராவணன் சிங்களன் என்று நிறுவ முற்பட்டு வருகிறார்கள்.

இராமயணம் வடமொழியில் எழுதப்பட்ட ஆரியர்களுக்குச் சொந்தமான உடைமையே. அதில் வில்லனாகச் சித்தரிக்கப் படுகிற இராவணன் ஆரியனே. ஆரியர் பாரதத்தை நிறுவ நாவலந்தேய தமிழர்களோடு எந்தப் போரும் நிகழ்த்தவே யில்லை; நள்ளிரவில் அணைக்கட்டுகளை உடைக்கவும், நள்ளிரவில் நெருப்பை மூட்டி கத்திக் கூச்சலிடுவதே அவர்கள் எதிரிகளை வீழ்த்தும் உபாயமாக இருந்தது.

ஆரியர்களின் நாள் தொடக்கம் பகல் 12மணி.

இரவு 2மணிதான் அவர்கள் தூங்கப் போகும் நேரம்.

தமிழர்கள் நாள் தொடக்கம் காலை 6மணி.

இரவு 8மணிக்கெல்லாம் தமிழர்கள் ஓய்வுக்குப் போய் விடுவார்கள். ஆரியர்களின் தந்திரயுக்திக்கு இது வாய்ப்பாய் அமைந்தது.

ஆரியர்கள்-

இராமயண, மகாபாரதத்தில் கையாண்டதாக விவரிக்கும் போர் முறைகள் அவர்கள் தம் இனத்திற்குள் நிகழ்த்திக் கொண்டவைகளே. இன்றுவரை ஆரியர்களுக்கு போர் கைவராது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.