Show all

கட்சத் தீவு மீட்பு மட்டுமே தமிழக மீனவர் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வாக முடியும்

கட்சத் தீவானது 1974 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது, 1974 இல் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகாவிற்கும், இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. அன்று முதல் இக்கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு சோதனைக்காலம் துவங்கிவிட்டது.

     கச்சத்தீவினைத் தாரைவார்த்துக்கொடுத்ததின் பின்னால் உள்ள அரசியலையும், நமது தமிழக அரசியல் தலைவர்களின்  செயல்படாத்தன்மையும் விரிவாக காணலாம்.

     பண்டார நாயகா மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி சிரிமாவோ பண்டார நாயகா இலங்கையின் பிரதமராக பதவிக்கு வந்தார், ஆனால் அவருக்கு இலங்கையில் அரசியல் ரீதியாக பல நெருக்கடிகள் ஏற்பட்டதால் தனது அரசியலை வலுவாக்கிக் கொள்ள ஏதேனும் அசாத்திய சாதனை செய்ய விரும்பினார்,

     இதனால் நீண்ட நாட்களாக இலங்கை உரிமை கேட்டு வந்த கட்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, அப்போதைய இந்தியப் பிரதமரை அனுகினார்.

     பண்டாரநாயகா காலம் தொட்டே நேரு குடும்பத்துடன் நட்புறவு கொண்டிருந்தார்கள், அதே நட்புடன் இந்திராவும் இருந்ததால் காரியம் சாதிக்க விரும்பினார். அக்காலக்கட்டத்தில் இந்திரா தலைமையிலான அரசுக்கும் ஒரு நெருக்கடி உருவானது, அது என்னவெனில், மே-18,1974 இல் இந்திராவின் திட்டப்பட்டி, ராஜஸ்தான் பாலைவனத்தில் போக்ரானில் முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை நிகழ்த்தப்பட்டிருந்து. இதனால் உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் மீது கோபம் கொண்டிருந்தன, மேலும் ஐநா அவையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க ஒரு தீர்மானம் கொண்டு வரும் திட்டமும் இருந்தது. எனவே ஐநா அவையில் தனக்கான ஆதரவைத் திரட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள இந்திரா காந்தி அவர்கள் ஆர்வமாக இருந்த சூழலில், சிரிமாவோ கட்சத்தீவைக் கேட்கவும் விட்டுக்கொடுத்து இலங்கையை வளைத்துவிடலாம் என திட்டமிட்டார்கள்.

     பல நாடுகள் இருக்கும் போது இலங்கையால் என்ன பெரிதாக ஐநாவில் உதவிட முடியும் என நினைக்கலாம், ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் ஐநாவின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்புநாடுகளின் தலைமை பொறுப்பினை இலங்கையே வகித்து வந்தது.

     ஐநா பாதுகாப்பு அவையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள், அது அல்லாமல் 15 உறுப்பினர்களைத் தற்காலிகமாக தேர்ந்தெடுப்பார்கள், பின்னர் அவர்களில் ஒரு நாட்டினை அகரவரிசைப்ப்படி ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு அவையின் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்வார்கள், எனவே அக்காலத்தில் இலங்கைக்கு பாதுகாப்பு அவையின் தலைவராக வரும் சூழல் உருவானது.

     எனவே இலங்கையை வளைப்பதன் மூலம் ஐநா பாதுகாப்பு அவையில் கொண்டு வரும் தீர்மானத்தினைத் தகர்க்கலாம் என திட்டம் போட்டு ,கச்சத்தீவினைத் தாரை வார்க்கும் திட்டத்தினை முன்னெடுத்தார் இந்திராகாந்தி.

     இது போன்ற ‘சூப்பர் திட்டங்களை’ எல்லாம் அரசியல்வாதியே போட்டிருப்பார் என்றெல்லாம் சொல்ல முடியாது, எல்லாம் அயலக உறவுத்துறை அதிகாரிகளின் கைங்கரியமாகத்தான் இருக்க வேண்டும்.

     இத்தனைக்கும், 1971 ஆம் ஆண்டு பங்களாதேச உருவாக்கப் போரின் போது, பாகிஸ்தான் விமான படை விமானங்கள் இந்திய வான் வெளியில் பறக்க தடை என்பதால், அரபிக்கடலில் சுற்றிக்கொண்டு, கிழக்கு பாகிஸ்தான் எனப்பட்ட பங்க்ளாதேசத்திற்கு செல்ல வேண்டிய நிலை, அப்பொழுது, விமான படை விமானங்களுக்கு எரிப்பொருள் கொடுத்து பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டிய நாடு தான் இலங்கை. ஆனாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு நட்பு பாராட்டி கச்சத்தீவினை கொடுக்க நம்ம ஆட்களே வரிந்துக்கட்டி வேலை செய்தார்கள் என்பதை எந்த வகையில் சேர்க்க?

     இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் அன்னிய நாட்டிற்கு விட்டுக்கொடுக்க நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமேயில்லை, நமது நாட்டின் சட்ட நிருவாகம் பிரிட்டீஸ் அரசால் உருவாக்கப் பட்டது. அந்தச் சட்டங்களைத்தாம் விடுதலை பெற்ற நாம், சட்ட மன்றங்கள் பாராளுமன்றங்கள் மூலம் அவ்வப்போது மற்றங்கள் செய்து பயன்படுத்தி வருகிறோம். தம் நாட்டின் பகுதியை விட்டுக் கொடுக்காத அளவிற்கான வலிமையான சட்டம்தாம் நமது சட்டம். அதனைப் பின்னர் விரிவாக காணலாம்.

     இந்திய நாட்டின்  ஒரு பகுதி என சொன்னால் தானே கொடுக்க முடியாது என்பதால், கட்சத்தீவு இந்தியாவின் பகுதியேயில்லை, இரு நாட்டுக்கும் இடையே பொதுவாக உள்ள ஒரு பகுதி, யாருக்கு சொந்தம் என தெரியாத ‘டிஸ்பியுட்டட்’ லேண்ட் என இந்தியாவே வலிய தெரிவித்தது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.

     ஏன் எனில் கட்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதியாகும் அதற்கான ஆதரங்களும் உள்ளன.

     இவ்வாறு கடலில் உள்ள பகுதியில் ஒரு இடத்தினையும் உடனே கொடுக்க முடியாது, புதிதாக கடல் எல்லையை வரையறுக்க வேண்டும். எனவே 1974 இந்தியா-இலங்கை கடல் எல்லை மறுசீரமைப்பு ஒப்பந்தம் என போடப்பட்டது. பின்னர் கச்சத்தீவினை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாகவும், இந்திய மீனவர்களுக்கு என சில  உரிமைகள் அளிக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாகவும் சொல்லி கட்சத்தீவினை தாரை வார்த்துவிட்டார்கள்.

     இரு நாட்டுக்கடல் எல்லைகள் ஒன்றின் மீது ஒன்றாக பரவும் நிலையில் புதிய கடல் எல்லை வகுக்க வேண்டும் எனில், இருநாட்டுக்கும் சம தூரம் வருமாறு கடல் எல்லை வகுக்க வேண்டும், அப்படிச் செய்தால் கட்சத்தீவு தானாகவே இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிடும் என்கிறார்கள்,ஆனால் அப்படி செய்யாமல் இலங்கைக்கு அதிகப்படியான கடல் எல்லை வருமாறு எல்லைப்பிரித்து விட்டார்கள்.

     மேலும் இந்தியாவின் ஒரு அங்கமான நிலப்பரப்பை வேண்டுமென்றே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனை விரிவாக காண்போம்.

     வௌ;ளையர்களின் காலனியாக இந்தியா இருந்த போதும் இந்தியாவில் பல தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களும், ஜமீன்தார்களும் இருந்தார்கள், அவர்களின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பின் உரிமையாளர்கள் அவர்களே, பிரிட்டீஷ் அரசு கூட அல்ல.

     தமிழகத்தின் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குட்பட்ட ஒரு நிலப்பரப்பே கச்சத்தீவு ஆகும், கி.பி 1882 ஆம் ஆண்டு முதல் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் கச்சத்தீவு உட்பட எட்டுத்தீவுகளுக்கு உரிமையாளர்கள் ராமநாதபுர சமஸ்தானமே. இதற்கான ஆவணங்களும், மேலும் பலருடன் இடப்பட்ட குத்தகை ஒப்பந்தங்களும் உள்ளன. வௌ;ளையருக்கே கூட தீவுகளை குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள் என ஆவணங்கள் உள்ளன.     மேலும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தினைக் கட்டியதும் ஒரு தமிழரே, 1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

     இந்தியா விடுதலையடைந்த போது சமஸ்தானங்கள் அனைத்தும் இந்திய யூனியனில் இணைக்கப்பட்டு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது, அவ்வேளையில் ராமநாதபுரம் சமஸ்தானமும் இணைக்கப்பட்டது, அவர்கள் சமஸ்தானம் குறித்த நில ஆவணங்கள் அனைத்தும் நடுவண் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது, எனவே அனைத்து ஆவணங்களும் நடுவண் அரசிடம் சிக்கிக்கொண்டதால் யாரும் கேள்விக்கேட்க முடியாது என 1974 இல் துணிகரமாக கச்சத்தீவின் உரிமையாளர் யார் என தெரியாத ‘டிஸ்பியுட்டட் லேண்ட்’ என அறிவித்து இலங்கைக்கு கைமாற்றிவிட்டார்கள்.

     இவ்வாறு செய்தால் மட்டுமே இந்தியாவின் நிலப்பரப்பை அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்க முடியும், அவ்வாறு இந்திய அரசியலமைப்பு சட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது என முன்னர் குறிப்பிட்டதை இப்பொழுது விரிவாக காண்போம்.

     இந்தியா என்பது முழு தன்னாட்சி பெற்ற ஒரு நாடு, அதன் செயல் படுத்தும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அன்னிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் நிறைவேற்ற, நிர்வகிக்க என அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஒரு புதிய நிலப்பரப்பினை இந்தியாவுடன் இணைக்க யாருடைய அனுமதியும் பெறத்தேவையில்லை, ஆனால் ஏற்கனவே இந்தியாவுடன் இணைந்த நிலப்பரப்பினை அன்னிய நாடுகளுக்கோ, சக்திகளுக்கோ தன்னிச்சையாக விட்டுக்கொடுக்க முடியாது என அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப் பட்டுள்ளது.

     இந்தியாவுக்கு சொந்தமான நிலபரப்பினை விட்டுக்கொடுக்க வேண்டும் எனில் அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதனை மாநிலங்கள் அவை, மக்களவை இரண்டிலும் சமர்ப்பித்து வெற்றிப்பெற வேண்டும், அதன் பின்னர் அச்சட்டத்தினை எந்த மாநிலத்தின் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க இருக்கிறார்களோ அம்மாநில சட்டமன்றத்திலும் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும், அதன் பின்னரே நிலப்பரிமாற்றம் செய்யலாம்.

     நாடாளுமன்ற இரு அவையிலும் ஒப்புதல் பெறுவதோடு, மாநில சட்டமன்றத்திலும் ஒப்புதல் பெறுவது என்பது கடினமான காரியம் எனவே எளிதில் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க முடியாது.

     கச்சத்தீவு குறித்தான ஆவணங்களை வைத்து நமக்கு சொந்தமான நிலம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், முன்னர் அரசு ஒப்பந்தம் மூலம் விட்டுக்கொடுத்த கச்சத்தீவு உடன்படிக்கை செல்லாது என அறிவிக்க இயலும்.

     இது முடியுமா என சந்தேகம் வரலாம்? ஆனால் இதற்கும் ஒரு முன்னுதாரண சம்பவம் இந்தியாவில் உண்டு.

     கி.பி 1947 ,ஆகஸ்ட்-15 இல் இந்தியா சுதந்திரமடைந்ததாக அறிவிக்கப்பட்டப்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையே முழுமையாக வரையறுக்கப்படவில்லை, எனவே நன்கு தெளிவான எல்லைகள் கொண்ட பகுதிகளை மட்டும் சரியாக குறிப்பிட்டு பிரித்துக்கொண்டு, மற்றவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என விடுதலை அறிவிக்கப்பட்டது.

 

மேலும் பாகிஸ்தான் மேற்கு,கிழக்கு என இரண்டுப்பிரிவாக உருவாகி இருந்தது. இதில் கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு வங்கத்துக்கும் சரியாக எல்லை பிரிக்காத சூழல்.

     அப்பொழுது மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக பெருபாரி வட்டம் இருந்தது, இதில் ஒரு பகுதி, கிழக்கு பாகிஸ்தான் என அறியப்பட்ட பகுதிக்குள் நீட்டிக்கொண்டு இருந்தது, அதே போல சில தனி தீவுகளாக கிழக்கு பாகிஸ்தானின் பகுதிகள் மேற்குவங்கத்தில் இருந்தன. அதாவது மதத்தின் அடிப்படையில் எந்த நாட்டில் சேர்வது என மக்களை முடிவெடுக்க சொல்லி பிரித்ததால் மேற்கு வங்க எல்லைக்குள் அமைந்த சில வட்டங்கள் மட்டும் கிழக்கு பாகிஸ்தானுடன் இணைந்துக்கொண்டன, ஆனால் அவர்களுக்கு நிலவியல் ரீதியாக கிழக்கு பாகிஸ்தானுடன் தொடர்பேயில்லை, இவ்வாறு தனித்தீவாக ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டின் பகுதி இருப்பதை என்கிளேவ் என்பார்கள்.

     இந்த என்கிளேவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானியர் அவர்கள் நாட்டுக்கு செல்ல பெருபாரி வட்டம் வழியாகத்தான் செல்ல வேண்டும், ஆனால் அது இந்திய நிலப்பரப்பு என்பதால், ஒவ்வொரு முறை செல்லவும், விசா நடைமுறையினைப் பின்பற்ற வேண்டும்.

     எனவே பாகிஸ்தான் அரசு பெருபாரி வட்டத்தில் பாதி எங்களுக்குச் சொந்தம், எல்லைக்கோட்டினை வரையறுக்கும் முன்னரே பெருபாரி வட்டம் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் தான் இப்பிரச்சினை, எனவே பெருபாரியை கொடுங்கள் எனக்கேட்க ஆரம்பித்தார்கள்.

     சமாதான புறா விரும்பியான நேருவுக்கு அண்டை நாட்டுடன் சர்ச்சை வேண்டாம் என ரொம்ப நல்ல மனசு, இத்தனைக்கும் பாகிஸ்தான் காஷ்மீர் சண்டை எல்லாம் போட்டிருந்தது, ஆனாலும் பாகிஸ்தான் நம்ம சகோதர நாடு என பெருபாரியை எடுத்துக்கோங்க என சொல்லி ஒப்பந்தம் போட்டுக்கொடுத்துட்டார்.

     இது நடந்தது 1951 இல், அப்பொழுது மேற்குவங்கத்தினை ஆண்டதும் காங்கிரஸ் கட்சியே, அதன் முதல்வராக டாக்டர்.பிசி.ராய் என்ற மூத்த காங்கிரஸ் தலைவர் இருந்தார். அவர் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போல தலையாட்டி பொம்மையல்ல, அது எப்படி மேற்கு வங்க மாநிலத்துக்கு சொந்தமான நிலத்தினை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கலாம், இதைப்பற்றி எங்கக்கிட்டே ஒரு வார்த்தை கூட கேட்கலையேனு கடுப்பாகிட்டார், ஒப்பந்தம் எல்லாம் செல்லாது, ரத்து செய்யுங்கள்னு நேருவிடம் சொல்லிப்பார்த்தார், நான் தேசிய தலைவர், நீர் மாநில முதல்வர் எனக்கே அறிவுரையா சொல்லுறீர்னு நேரு கண்டுக்கவேயில்லை போல.

     பி.சி.ராயும் விடுவதாக இல்லை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை நடுவண் அரசுக்கு எதிராகவே போட்டுவிட்டார், அதற்கு அடிப்படை நாம் முன்னர் பார்த்த அரசியல் நிர்ணய சட்டமே, பெருபாரியை வெறும் ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்கொடுத்தது செல்லாது, அப்படி செய்வது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு விரோதம் என்பதே வாதம். ஒரே கட்சியாக இருந்தாலும் ,மாநில நலனை கருதி அவ்வாறு செய்தார். வழக்கை வாபஸ் பெற வைக்க நேரு தரப்பும் பல முயற்சிகள்  செய்து பார்த்தது, ஆனால் பி.சி.ராய் மசியவேயில்லை, அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கலாம்னாலும் அதுவும் முடியலை, எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் பி.சி.ராய் பக்கமே, போதாக்குறைக்கு மக்களும் பலத்த ஆதரவு, நடுவண் அரசுக்கு ஆப்பசைத்த குரங்கு நிலைமை, சொந்த கட்சியையே சமாளிக்க முடியலை, பாகிஸ்தானிடமும் திரும்பி கேட்க முடியலை.

 

1951 இல் போட்ட வழக்கு, அப்படி இப்படினு இழுத்து 1960 இல் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்திய அரசின் தலைமை பொறுப்பில் உள்ளவருக்கு அதிகாரம் இருக்கு, ஆனால் வெறும் ஒப்பந்தம் மூலமாக எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது, ஏற்கனவே அரசியல் நிர்ணய சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சட்ட திருத்த வழியை தான் பின்ப்பற்றனும் என்பதே தீர்ப்பாகும்.

     நேரு அப்பொழுதும் பிரதமராகத்தான் இருந்தார், ஆனால் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் அதனை பி.சி.ராய் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்து தோற்கடிக்க கூடும் என கருதினார், ஏன் எனில் அப்பொழுது மற்ற கட்சிகளும் பி.சி.ராய்க்கு தான் ஆதரவு, அப்பொழுது பி.ஜேபியின் முன்னோடியான ஜனசங்கம், மற்றும் சட்ட மேதைகள், மற்ற சிறிய கட்சிகள் எல்லாம் வழக்கில் தங்களையும் ஒரு வாதியாக சேர்க்க சொல்லி, நடுவண் அரசுக்கு எதிராக வாதாடி வந்தன. இதனால் நேருவுக்கு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்து பெருபாரி பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க தயக்கம், எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் சொல்லி பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விட்டார்.

     அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட நிலப்பரப்பினைச் சட்ட போராட்டத்தின் மூலம் ஒரு மாநில முதல்வர

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.