Show all

கணியக்கலை: 18,69,837

நாள்: 19

கிழமை: செவ்வாய்

மாதம்: ஆனி 

பருவம்: முதுவேனில்

தமிழ் தொடர் ஆண்டு: 5120

நாள்மீன்: சதயம் 

ஓரை: கும்பம்

தமிழ்தொடர்நாள் எண்: 18,69,837

இன்றைய இயல்பு எண்: ஆறு

இயல்பு: இலக்கியம்.

இன்றைக்கு ஒவ்வொருவர் படைக்கிற இலக்கியத்தையும், சமூக வலைதளங்களில் பதிவிட்டு, விரும்பம், மற்றும் பகிர்தல் அடிபடையில் நம்முடைய ஆற்றலை தெரிந்து கொள்ளவும், இலக்கியத்திறனை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. 

இயல்பு எண் ஆறில் சூட்டிக் கொள்ள அழகான தமிழ்ப் பெயர்கள்: தமிழ்அருவி, அறிவுக்கொடி.

இன்றைய உற்சாகமான செய்தி: இன்றைக்கு நாம் மங்குனி மன்னர்களால் ஆளப்பட்டு வருவதால், தமிழக மக்கள் போராட்டச் சுமையை விரும்பி ஏற்க வேண்டியதாக இருக்கிறது.

இன்றைய நேரத்தில், 'நாம் எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தெரியுமா என்கிற பழம்பெருமைதான் நம்மை தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. 

அப்படியானதொரு பெருமை பாராட்டுவதற்கான உற்சாக செய்திதான்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு! 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.