Show all

ஊழல்! ஓர் பார்வை

15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பற்றாக்குறைதான் ஊழலுக்கு அடிப்படை. இரண்டாவது அதிகாரம். இந்தப் பள்ளியில் ஐம்பது மாணவர்களுக்கு மட்டும் இடம் இருக்கிறது. விண்ணப்பங்கள் ஐம்பத்தி ஒன்று வந்தாலும் அங்கு ஊழலுக்கான விதை விதைக்கப் பட்டுவிடுகிறது.
இந்த மேல்நிலைத் தொட்டியில் ஐம்பது வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு கொடுக்க முடியும். விண்ணப்பங்கள் ஐம்பத்தி ஒன்று வந்தாலும் அங்கு ஊழலுக்கான விதை விதைக்கப் பட்டுவிடுகிறது.
இந்த மின்மாற்றியில் ஐம்பது வீடுகளுக்குத்தான் மின்இணைப்பு கொடுக்க முடியும். விண்ணப்பங்கள் ஐம்பத்தி ஒன்று வந்தாலும் அங்கு ஊழலுக்கான விதை விதைக்கப் பட்டுவிடுகிறது.
இந்த அரசு அலுவலகத்தில் ஐம்பது பணியாளர்கள் வேலைக்குத் தேவை. விண்ணப்பங்கள் ஐம்பத்தி ஒன்று வந்தாலும் அங்கு ஊழலுக்கான விதை விதைக்கப் பட்டுவிடுகிறது.
தமிழகத்தில் ஒருகட்சி கூட்டணி அமைத்ததால் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட அந்தக் கட்சிக்கு கிடைத்த சட்டமன்றத் தொகுதிகள் ஐம்பது. விண்ணப்பங்கள் ஐம்பத்தி ஒன்று வந்தாலும் அங்கு ஊழலுக்கான விதை விதைக்கப் பட்டுவிடுகிறது. எந்தத் துறையில் பற்றாக்குறை இருந்தாலும் அந்தத் துறையில் ஊழல் தானாக முளைக்கும். 

தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்குப் போதுமான இடங்கள் இருக்கின்றன. மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு மருத்தும் படிக்க போதுமான இடங்கள் இல்லை. அவர்கள் உமி கொண்டுவருவார்கள் நாம் அரிசி கொண்டு செல்வோம் நீட் தேர்வின் மூலம் ஊதி ஊதி சாப்பிடலாம் என்கிற போது, ஒரு முறைக்கு இருமுறை உமியே கிடைத்தால் ஆள்மாறட்ட ஊழல் முளைக்கத் தொடங்குகிறது. 

இந்தியாவில் மாநில அரசு ஒன்றிய அரசு என்று இரண்டு அரசுகள் இருக்கிற போது எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளும் போது, நிருவாகம் அதிகாரிகள் மயமாகி விடுகிறது. 
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற அரசுக்கு, அடுத்து முறை தேர்தலில் வெற்றபெற முடியாமல் போகுமே என்கிற அச்சம் இருக்கும். அதிகாரிகளுக்கு அச்சம் எதற்கு இருக்கும்.
எந்தக் கட்சியும் ஒரு மாநில நலன் கருதக் கூடிய கட்சியாகவே இருக்கும். எந்தவொரு கட்சியும் இரண்டாவது மாநிலத்தில் போட்டியிடும் தகுதி பெற்றதாக இருக்க முடியாது. காங்கிரசும், பாஜகவும் அனைத்து மாநிலக்கட்சிகள் போல வேடமிட்டு ஒன்றிய ஆட்சியில் அமர்ந்து, மற்றமற்ற மாநிலத்தின் மீது வெற்று அதிகாரம் செலுத்தி வருகின்றன. 
காங்கிரசும், பாஜகவும் வடமாநிலங்களின் கட்சியாக இருக்கிற நிலையில் இரு ஆட்சிகளிலும் ஹிந்தி, சமஸ்கிருதம், ஹிந்துத்துவா, வடஇந்திய கார்ப்பரேட்டுகள், மற்ற மாநிலங்கள் மீது அதிகாரம் செலுத்தி வந்திருக்கின்றன. 
தலைமைஅமைச்சராக வந்தவர் ஊழல் செய்யாதவராகவும், மாநிலமுதல்வர்களாக வந்தவர்கள் அனைவரும் ஊழல் செய்வதற்காகவே பிறந்தவர்களாகவும் ஒன்றய அரசு அமைப்புகள், அதிகாரிகள் முன்னெடுக்கிறார்கள்.

இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பற்றாக்குறையை அப்புறப்படுத்தி அனைவருக்கும் கல்வியும் வாய்ப்பும் வழங்கவும், அதிகாரத்தை மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ளவும் படுமேயானால் ஊழல் முளைப்பதற்கு வாய்ப்பில்லாமல் பட்டுப்போகும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,382.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.