Show all

நமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்!

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது பழந்தமிழகத்தில் மன்னர் ஆட்சி காலத்தில், அணை கட்டி நீர் வளம் பெருக்கினார்கள். 

மக்களாட்சி என்று சொல்லிக் கொள்கிற இந்தக் காலத்தில் அணையில் மணல் திருடி விற்கிற தொழிலைச் செய்ய ஆளாய் பறக்கிறார்கள் ஆட்சியாளர்கள். 

நமது பழந்தமிழகத்தில் மன்னர் மட்டுமல்ல இன்றைக்கு இதழியலாளர்களாக இருக்கிறவர்கள் பணியான அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பை செழுமை படுத்துகிற பொறுப்பை அன்றைக்குப் புலவர்கள் செய்து வந்தார்கள். மன்னன் சரியில்லை என்றால் மன்னவனும் நீயோ வளநாடும் உன்னுடையதோ என்று கிளம்பிப் போய் விடுவார்கள். 

இன்றைக்கு அதே பொறுப்பில் இருக்கிற இதழியலாளர்கள் ஒருவரும் மக்களுக்கானவர்கள் இல்லை. மக்களுக்கானவர்களாகவும் இயங்க முடியாது. அரசிடம் விளம்பரம் வாங்கி, அரசை சாடுவதைப் போல நடித்து, அல்லத ஏதோ ஒரு அரசியல் கட்சி சார்ந்து பிழைப்பு நடத்தியாக வேண்டும்.

மன்னனும், புலவர்களும்  மக்களுக்கானவர்காளாக இருந்த நம் பழந்தமிழர் காலத்தில் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள் குறித்து பெருமைக்குரிய தமிழ்ப் புலவர்கள் இலக்கியங்களில் பதிவு செய்து வைத்திருந்ததால் அவைகள் குறித்து தற்போது நாம் அறிய முடிகிறது. 

01. அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர்              அரண்

02. அருவி - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது

03. ஆழிக்கிணறு - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு -  பெருகி ஓடும் நீரோட்டம்

05. இலஞ்சி - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்

06. உறை கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு

07. ஊருணி - மக்கள் பருகும் நீர் நிலை

08. ஊற்று - புவிக்கடியிலிருநது நீர் ஊறுவது

09. ஏரி - வேளாண்மை பாசன நீர் தேக்கம்

10. ஓடை - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்

11. கட்டுந் கிணக்கிணறு- சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு

12. கடல் - பெரு நீர்பரப்பு

13. கம்வாய்- பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்

14. கலிங்கு - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் - நீரோடும் வழி

16. கால்வாய் - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி

17. குட்டம் - பெருங் குட்டை

18. குட்டை- சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை

19. குண்டம் - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை

20. குண்டு -   குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி -   நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு

22. குமிழி ஊற்று -  அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 குளம் -   ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படு நீர் நிலை.

24. கூவம் -   ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு

25 . கூவல் -   ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்

26. வாளி   ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி-   அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு

28. சிறை   தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை

29. சுனை -   மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை

30. சேங்கை -   பாசிக்கொடி மண்டிய குளம்

31. தடம் -  அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்

32 . தளிக்குளம் -   கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.

33. தாங்கல் - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்

34. திருக்குளம் -   கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்

35. தெப்பக்குளம் -  ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்

36. தொடு கிணறு -  ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்

37. நடை கேணி -  இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

38. நீராவி -  மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்

39. பிள்ளைக்கிணறு -  குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு -   ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு

41. பொய்கை -   தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை

42. மடு -   ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்

43. மடை -  ஒரு கண்ணே உள்ள சிறு மதகு

44. மதகு -   பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது

45. மறு கால் -   அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்

46. வலயம் -   வட்டமாய் அமைந்த குளம்

47 வாய்க்கால் -   ஏரி முதலிய நீர் நிலைகள்

48. அணை – அற்றின் குறுக்கே கட்டப் படும் கதவுகள் கொண்ட நெடுஞ்சுவர் அரண் 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,059.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.